RSS

Monthly Archives: March 2011

கதை!!!

கதை!!!



வானம் இளஞ்சிவப்பு ஆடை அணிந்திருந்ததை போலத்தோன்றியது. மேற்கே சூரியன் மறையத் துவங்கி இருந்தான். அதன் பொன்னிறக் கதிர்களையும், மெலிதாய் வீசிய மாலைநேரத் தென்றலையும் ரசிக்காதவர்கள் இருக்கவே முடியாது எனினும் தற்போது தான் முதன்முதலாய் உணர்பவள் போல சற்றும் இமைக்காமல் தான் பார்வையை சூரியனின் மீதும், உணர்வை தென்றல் மீதும் தனித்தனியே பதிய வைத்திருந்தால் அத்விகா. ஆனாலும் அவளது எண்ணம் என்னவோ ஒன்றின் மீது மட்டுமே இருந்தது.

தன் கையில் ஏழுதுவதற்கு தயாராக பேப்பரும், பேனாவும் வைத்துக்கொண்டு வெற்றிபெற்ற பூரிப்போடு அமர்ந்திருந்தாள். அவளது நினைவலைகள் சற்றே பின்னோக்கி சென்றது.

அத்விகா?” தன் தோழி ரம்யாவின் குரல்கேட்டுத் தன்னையும் அறியாது மூழ்கிஇருந்த சிந்தையிலிருந்து சற்றே விடுபட்டாள் எனினும் முழுமையாக தெளிவுபெறவில்லை அத்விகா.

அத்விகாவும் ரம்யாவும் கல்லூரியில் பயிலும் மாணவிகள். கல்லூரியிலும் விடுதியிலும் ஒன்றாகவே இருக்கும் தோழிகள். இருவருக்குள்ளும் பரஸ்பரமும், நல்ல நட்பும், புரிந்துகொள்ளும் தன்மையும் இருந்தது. இருவருடைய நட்புவட்டாரத்தைப் பற்றி இருவருமே நன்கு அறிந்திருந்தனர். ஒருவருடைய பிரச்சனைக்கு மற்றொருவர் தீர்வு கூறுவது போன்ற செயல்கள் அவர்களுக்குள் ஒத்துப்போயின .

அத்விகாவின் பெயர்க்காரணம் ஆங்கிலத்தில் சொல்வதானால் ‘யுனிக்நெஸ்’. தமிழில் ‘தனித்தன்மை மிகுந்த’ என்னும் பொருள் வரும்படி தேடிக்கண்டுபிடித்து பெயர் சூட்டி இருந்தார்கள் அத்விகாவின் பெற்றோர். அதனால்தானோ என்னவோ, பெயருக்கு ஏற்றது போல அவளிடமும் அந்தப் பண்பு நிறையப்பெற்றிருந்தது.

எதையும் தெளிவாக யோசித்து தீர்கமாக செய்து முடிப்பாள். ஆனால் இப்போதோ , நிமிடத்திற்கு ஆயிரம் முறை ‘என்ன செய்ய? எப்படிச் செய்ய?‘ என்ற இரண்டு கேள்விக்கணைகள் மட்டுமே அவளை நிஜத்திலும் நினைவிலும் கடந்த இரு வாரங்களாக ஆக்கிரமித்து இருந்தது. அவளால் இன்னமும் ஒரு தெளிவான முடிவுக்கு வர இயலவில்லை. கல்லூரி நேரம் முடிந்து விட்டது. கல்லூரியிலிருந்து ஐந்து நிமிட நடைபயண தூரம் தான் விடுதி. விடுதியை சென்றடைவதற்குள் தான் இத்தனை போராட்டமும் அவளுக்குள் நடைபெற்றிருந்தது என்பதை தோழியின் குரல் கேட்ட பின்னரும் உணர்வுற்றவளாய் தெரியவில்லை.

நான்  எப்படி இதைச் செய்வேன்? என்னால் முடியுமா? முடியுமனு ஒரு குருட்டு நம்பிக்கையில் சொல்லிட்டேன். ஆனா இப்ப என்ன செய்வது? நேரம் எதுவும் குறிக்கல, இருந்தாலும் இன்னொரு தடவ கேக்கறதுக்குள்ள முதல் அடியாவது எடுத்து வைக்கனுமே! அதற்ர்காகவாது எதாவது செய்தாகனும்! எத்தனை எத்தனை முறைதான் யோசிக்கறது? ஒன்னுமே தோனலையே !” என்று மீண்டும் தனக்குத்தானே கேள்வியாகிப்போனால் விடுதி வாயிலிலிருந்து அறைக்கு செல்லுவதற்குள்.

ரம்யாவிற்கு அத்விகாவின் திடீர் மாற்றம் புரியாத புதிராகத்தான் இருந்தது என்றாலும் ஒரு வாரமாக இருந்ததைவிட தற்போது நாளுக்கு நாள் அவளது நிலைமை சற்று தீவிரமாகி வருவதை ரம்யா கவனிக்க தவறவில்லை. அதன் விளைவாக ரம்யா அத்விகாவை வினவளானால் “அத்விகா என்ன ஆச்சு ? உனக்கு? எதோ பலமான யோசனையில மூழ்கி உள்ளத போல தோணுதே? அது எத பத்தின்னு நா தெரிஞ்சுக்கலாம?“என்று கேட்கும் போது அறையை திறந்து இருவரும் உள்ளே நுழைந்தனர்.

தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தவளுக்கு ரம்யாவின் இரண்டு மூன்று தொடர் கேள்விகள் பெரும் ஆறுதல் அளித்ததோடு முற்றிலுமாக அவளை தன்னிலைக்கு மாற்றி இருந்தது. மயக்கத்தில் இருந்து தெளிந்தவளைப்போல சுற்றும் முற்றும் பார்த்தவள் ரம்யாவின் கேள்விகளை தன்னுள் வாங்கிக்கொள்ள சில வினாடிகள் தேவைப்பட்டது. அதன் பின்னரே அவள் பதிலளிக்க தயாரானாள் அதுவும் கோர்வையான வினாக்களால்.

“என்ன ரம்யா? என்ன கேட்ட? ஏதோ கேட்டமாதிரி இருந்ததே? என்னையா கேட்ட?” என்று அத்விகா கூறியதும் விடையை எதிர்பார்த்த ரம்யாவிற்கு இத்தகைய பதில் வினாக்கள் ஏமாற்றத்தையே அளித்தன எனினும் தான் பேசியதையாவது கவனித்தாள் என்ற அளவிற்கு நிம்மதியடைந்தாள்.

ஆமா உன்கிட்ட தா கேட்டேன். ஏதோ யோசனையிலேயே ஒரு வாரமாக் சுத்துறியே அதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சுகுறதுக்காக” என்று கூறி அறையின் நடுவே கிடந்த நாற்காலியில் அமர்ந்தாள்.

அதுவாஅது ஒரு பெரிய கதைஉன்கிட்ட சொல்லனும்னு நானே நினைச்சேன். ஆனால் நீயே இப்ப கேட்டுட்ட. சொல்றேன் கேளு!. நான் ஒரு சிறுகதை எழுதணும். எழுதியே ஆகணும் . எழுதுரேனும் சொல்லிட்டேன். எப்படி எழுதுவது, என்ன எழுதுவதுன்னு தான்  ஒன்னுமே புரியல. அதை பத்தி தான்  சிந்திச்சிட்டு இருக்கேன்  சொல்லிவிட்டு அறையின் குறுக்கும் நெடுக்கும் நடக்கலானாள்.

 “சிறுகதையா? எதுக்கு ?” கேள்விக்குறியாக மாறினாள் ரம்யா.

 “அதுவே ஒரு பெரிய கதை” என்று பெருமூச்சு விட்டவள் தொடர்ந்தாள், “உனக்கே தெரியும் என்னோட நண்பர்களை பத்தியும் அவங்களோட திறமைகளை பத்தியும் . அவங்க இப்போ எடுத்த முடிவுப்படி ஒவ்வொருவருக்குளும் இருக்குற திறமையை வெளிக்கொண்டுவர்ற வகையில கவிதை கட்டுரை அல்லது கதை மாதிரி அவுங்க அவுங்களோட சொந்தமா எழுதி வெளியிடனும்னு முடிவு எடுத்திருக்காங்க. மத்தவங்க எழுதிடுவாங்க. அவங்களுக்கும் தமிழுக்கும் அப்படி ஒரு பந்தம் இருக்கு . நான் எழுதுறத நெனச்சா தான் …”, முடிப்பதற்குள் அறையை நாற்பது முறை அளவெடுத்தவள் போல மூச்சிரைக்க நின்றாள்.

இதனை கேட்டுக்கொண்டிருந்த ரம்யா, கதையை தானே சொன்னதைபோன்று உணர்ந்தவளாய் மேஜையின்மீதிருந்த தண்ணீரை அருந்தியவாறு ” நல்ல விஷயம் தான ? இதுக்கு ஏன் இவ்வளவு கவலை? எதை எழுதப்போற? நீ யோசிக்கறத பாத்த கவிதை தொகுப்பாகக்கூட இருக்கும் போல! எழுத ஆரம்பிச்சுட்டியா? எதை பத்தி ? என்ன தலைப்பு? நான் பாக்கலாமா?” மூச்சு விடாமல் குடித்த தண்ணீருக்கான வேலையை செய்து முடித்தாள்.

ஹா ஹாகவிதையா? நானா? நல்ல கேட்ட போ! அவங்க சொல்லி ரெண்டு வாரங்கள் முடிஞ்சிருச்சு. ஒரு வாரம் கவிதையா கதையா கட்டுரையா எதை எழுதுறதுன்னு யோசிச்ச்சதுலயே நேரம் போயிருச்சு. கவிதை எழுத ரசனையும் கற்பனை ஆற்றல், தமிழ் மொழியை கையாளும் திறமை இதெல்லாம் வேண்டும். கட்டுரை எழுத ஒரு தலைப்பை பத்தி நுண்ணறிவும், அத மத்தவங்க ஏத்துக்குற மாதிரி படைக்குற ஆற்றலும் வேணும் . இந்த ரெண்டும் கஷ்டமா தெரிஞ்சதால அது வேணான்னு மூனாவதா உள்ளகதை‘யை செலக்ட் பண்ணினேன் .” என்று ஒரு பெரிய விளக்கமே தரலானாள் தன் முடிவைப்பற்றி.
 

அத்விகாவின் விளக்கத்தை கூர்ந்து ரசித்துக்கொண்டிருந்த ரம்யா “அப்புறம் என்ன? எப்படியோ கதை எழுதுறதுன்னு முடிவு பண்ணிடே, இப்போ நீ கதைக்கு எத்த தலைப்பை தானே யோசிசிட்டு இருக்க ?” என்றாள் ஆர்வம் மிகுந்தவளாய்.

அழுவதா சிரிப்பதா என்றே தெரியாத நிலையில், கேலியும் கிண்டலும் ஒருசேர்த்த குரலில்,” அது எப்படி எல்லாராலும் முடியுது ? என்மேல இவ்வளவு நம்பிக்கையா? நானாவதுகதைய எழுதி முடிப்பதாவதுஒரு வாரம் முடிவு எடுக்குறதிலேயே போயிருச்சு, இப்போ ரெண்டாவது வாரம் எப்படி போச்சுன்னுகேள்! கதை எழுவது ஒன்னும் அவ்வளவு சிரமமில்லை , ஏதாவது கதை ஓட்டிவிடலாம் என்று நான் நெனச்சது தப்பபோச்சு. முடிவெடுத்ததுக்கப்பரம் தெரியுது, அது  ரெண்டையும் விட இதுதான் ரொம்ப கஷ்டம்னு .”

அத்விகா, “கவிதை – ஓரிரு வரிகளில் முடித்துவிடலாம். கட்டுரை – ஓரிரு பத்திகளில் முடித்துவிடலாம். ஆனால் கதை… ஓரிரு பக்கங்களாவது இருக்க வேண்டும். அதுவும் ஆரம்பம் முதல் கடைசி வரை படிப்பதற்கு சுவாரஸ்யமாக, ஒரு கதைக்கரு, கதை மாந்தர்கள், என்று இன்னும் எத்தனை எத்தனையோ. இவை ஏற்படுத்திய கலக்கம்தான் கடந்த ஒரு வாரமாக எனக்கு. இன்றளவும் கதையை துவங்கவில்லை . நான் என்றைக்கு கதை எழுதி முடிக்கப்போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை” என்று தன் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தாள். “யோசிக்க வேண்டிய விஷயம் தான். யாராக இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்பார்கள்” என்று அத்விகாவின் நிலைமையிலிருந்து பேசினாள் ரம்யா.

நாவறண்ட காரணத்தினால் தனக்கு தண்ணீர் குடிக்கத்தோன்றவே, ரம்யாவின் அருகே இருந்த மேஜைமீதிருந்த தண்ணீரை குடித்துவிட்டு அவளருகிலேயே அமர்ந்து சற்று அதிகமாக கவலை தோய்ந்த முகத்துடனும் குரலுடனும் ஆரம்பித்தாள்,”நான் அவ்வளவாக எந்த புத்தகத்தையும் படித்ததே கிடையாது. ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் படிக்கும் பழக்கத்தையே ஆரம்பித்துள்ளேன். அதற்குள்ளாக எழுத வேண்டும் என்றால் எப்படி? எல்லாவற்றிற்கும் மேலாக இருவர் ‘டைரக்டர்’ ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடும் கனவோடும் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். அவர்கள் இருக்கும் போது நான் என்ன எழுதிவிடப்போகிறேன்.” என முடித்தாள்.

அத்விகவின் முகத்தையே உற்று நோக்கியிருந்த ரம்யா ” உனக்கு அப்படிப்பட்ட நண்பர்கள் கிடைத்ததற்கு நீ பெருமைப்படு. இதனை ஒரு நல்ல துவக்கமாகக்கொள். உன்னையே நீ அடையாளம் காணுவதற்காக அவர்கள் கொடுத்த வாய்ப்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக இதனை ஏற்றுக்கொள். உன்னால் நிச்சயம் முடியும். வெளியில் தேடாமல் உன் கதைக்கான தேடலை உனக்குள் இருந்து துவங்கு. முதல் முயர்ச்சியிலேயே வெற்றி கிட்டும்.” என்று தீர்கமாக அத்விகவின் முயற்சிக்கு வித்திட்டு பேசினாள்.

உன்னுள் இருந்தே கதை தேடலைத்துவங்கு‘ என்னும் வரிகள் பசுமரத்தாணிபோலமனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவே, அவ்வரியை முனுமுனுத்துக்கொண்டே எழுந்த அத்விகா புத்துணர்வு மேலோங்க “கிடைத்துவிட்டது!!! எனது கதை!!!

எனது முதல் கதை என்னைபற்றியதாகவே இருக்கட்டும். நான் கதை எழுத எடுத்த முயற்சிதான் என் முதல் கதைக்கான கரு. எப்படி?” என்று மகிழ்ச்சியோடு கூறினாள். கதை எழுத ஆயத்தமான அத்விகவை புன்முறுவலோடு நோக்கினாள் ரம்யா. இனி தன் தோழியை எழுதுவதிலிருந்து யாராலும் நிறுத்த இயலாது என்ற நம்பிக்கையும், அவளுக்கு கிடைக்கப்போகும் வெற்றியின் பிரதிபலிப்பும் ரம்யாவின் கண்களில் மின்னலென பளிச்சிட்டன.

!!!இனிமேல் தான் துவக்கமே!!!



 
 

Ubiquitous Tricolour

Ubiquitous Tricolour

 
2 Comments

Posted by on March 26, 2011 in Food For Eyes, Vinod Kumar H

 

LionKing

னிதன் மற்றவர்களுக்கு பட்டம் கொடுப்பதற்காக அதிகம் சிந்திப்பதோ, மெனக்கெடுவதோ இல்லை. பட்டத்திற்கும் சம்மந்தப்பட்டவருக்கும் பொருத்தம் கூட பார்காமல், கொஞ்சம் எதுகை மோனையுடனோ அல்லது எதாவது ஒரு பெரிய பொருளுடன் ஒப்பிட்டோ, காரியத்தை எளிமையாக முடித்துவிடுவார்கள். ஆனால் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ அளித்த பட்டங்களில் மிகமிக பொருத்தம், சிங்கத்திற்கு மட்டுமே!. ‘காட்டு ராஜா !’
மனிதனைப் பொறுத்தவரை மிருகங்களின் அடிப்படைத் தேவை உணவு, புணர்ச்சி மற்றும் தற்காப்புக்காக தாக்குவது. னால் இந்த மூன்று காரணங்களையும் தாண்டிய அவற்றின் சிந்தனையும் செயல்பாடும் நம்மை கொஞ்சம் வியப்படையத்தான் வைக்கிறது.
சிங்கத்தை பொறுத்தவரை ‘ஆதிக்கம்‘ மிக முக்கியமாக கருதப்படும். சராசரியாக ஒரு சிங்க கூட்டத்தில் (Pride!) 1 முதல் 4 வரை பெரிய ஆண் சிங்கங்களும் (ஆண் சிங்கத்திற்கு ஆங்கிலத்தில் ‘TOM’ என்றும் ஒரு பெயர் உண்டு), 6 முதல்10 வரை பெரிய பெண்சிங்ககளுடன் இருக்கும். இதில், ஆண் சிங்கங்களில் ஆல்ஃபா  (Alpha) , பீட்டா(Beta)  என்றுதரவரிசையும் உண்டு. பெரும்பாலும் ஒரே ஒரு ஆல்ஃபா  சிங்கம் தான் ஒரு கூட்டத்தில் வசிக்கும் (சர்வாதிகாரம்!).ல்ஃபா  சிங்கத்திற்கான தகுதி – பலம், எடை, வேகம், துணிவு, பயமுறுத்தும் அணுகுமுறை மற்றும் எதிர்பவர்களை ஆரம்பத்திலேயே அடக்கிவைப்பது. மேலும் பிடறியின் அளவும், கருமையும் கூட கூட்டத்தின் தலைவனை முடிவு செய்யும். பூனை குடும்பத்தில் (cat family) கூட்டமாக வாழ்வது சிங்கம் மட்டுமே!]
னால்!  ஒரு கூட்டத்தின் தலைவனாக இருப்பது  அவ்வளவு சுலபம் அல்ல. என்னதான் ஒரு நாளுக்கு 20 மணி நேர ஓய்வு என்றாலும், தன்னுடைய எல்லையை பாதுகாப்பதில் ஆண்தான் முழு பொறுப்பு வகிக்கிறது. ஆண் சிங்கம் தன் எல்லையை குறிக்க மரங்களிலும், செடிப்புதர்களிலும் சிறுநீர் கழிக்கும். இந்த வாசனை மற்ற சிங்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக விளங்குகிறது. மேலும் ஒரு சிங்கத்தின் கர்ஜனை சுமார் 8கி.மி வரை ஒலிக்கும்இதுவும் கூட வேற்று கூட்டத்தை சேர்ந்த சிங்கங்கள் தன் எல்லைக்குள் வராமல் தடுக்கவே! சராசரியாக ஒரு கூட்டத்தின் தலைவன் தன் நாளின் தொடக்கத்திலும் முடிவிலும் கர்ஜிப்பது வழக்கம்.


வேட்டை!.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மைஇது சிங்கத்தின் உண்மையான வாழ்கை நெறி.  ஒரு இரையை குறிவைத்து, அதனை ஒட்டுமொத்த கூட்டமும் சுற்றி  வலைத்துஇரையின் தப்பிக்கும் வழிகளை மறைத்து, அதன்பின்னரே  தாக்கும். 

சாதாரனமாக, இரவில் மிகவும் குளிர்ந்த பொழுதுகளில்தான் சிங்கங்கள் வேட்டைக்குச் செல்லும்இரையின் அளவு ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் போதுமானதாக இருந்தால், எல்லோருக்கும் ஒரே பந்திதான்! ஆனால், அளவு குறைவான நேரத்தில் தலைவனுக்கே முன்னுரிமை. காரணம் – கூட்டத்தை காக்கும் தலைவன் பலத்துடன் இருப்பது அவசியம் என்று மொத்த கூட்டமும் உணரும்(ஒரு ஆண் சிங்கம் சராசரியாக ஒரு வேளைக்கு 34கி இறைச்சி உண்ணும்)
ல்லோரும் நம்புவது  போல் பெண் சிங்கம்தான் வேட்டைக்கு செல்லும். குட்டிகளுக்கும் பரிமாறும். னால் சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி 50% முதல் 60% வரை, வேட்டையில் ஆண்களும் பங்குகொள்கிறது. குறிப்பாக இரையின் அளவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆண் சிங்கமே  வேட்டையை முன் நின்று நடத்தும். (சிங்கங்கள் ன்று கூடி பெரும் ஆப்பிரிக்க யானையையும் கொன்றுவிடும்)
புணர்ச்சியிலும் சிங்கம் சிங்கம்தான்!. ஒரு பெண் சிங்கம் புணர்ச்சி காலத்தில், ஒரே நாளில் ஐம்பதுமுறைக்கும் மேல்ஆண் சிங்கங்களுடன் புணரும். இந்த காலம் மூன்று அல்லது நான்கு நாள் நீடிக்கும்.  பின்பு    மூன்றரை மாதத்தில்குட்டிகள்.
குட்டிகள்  இரண்டு  ஆண்டு வரை பெற்றோரின்   பராமரிப்பிலேயே   வளரும் ஆண் சிங்கங்கக் குட்டிகள்,  மூன்று வயதை நெருங்கும் போது, பிடறிகள் வளர்ந்து கொஞ்சம் இளமை தென்பட்டால், அது கூட்டத்தின் தலைவனால் கூட்டத்தைவிட்டு விரட்டப்படும்! (ஆதிக்கப் பிரச்சனை தான் காரணம். மேலும் தன் மனைவிமார்களை பாதுகாத்துக்கொள்வதற்காக).  இப்போது அந்த குட்டிகள் –  நாடோடிகள்!
நாட்கள் கழியக் கழிய இவை தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு (Survival of the Fittest!)மற்ற நாடோடிச் சிங்கங்களை கூட்டு சேர்த்துக்கொண்டு வேறு ஒரு கூட்டத்தை தாக்கி, அதன் தலைவனை விரட்டிவிட்டு, அந்த கூட்டத்தின் பெண்களை தன் வசம் க்கிக்கொள்ளும். இப்போது இது மீண்டும் ராஜா!.
அந்த புதிய கூட்டத்தின் பெண் சிங்கங்கள் உடனடியாக சேர்க்கைக்கு சம்மதிக்காது. இந்த புதிய தலைவன் தன் திறமைகளையும், த்னனால் இந்த கூட்டத்தை கட்டிகாப்பாத்த முடியம் என்றும் நிருபித்தாக வேண்டும். பின்புதான் பெண் சிங்கம் ப்ச்சை கொடி காட்டும்!. இதற்கு குறைந்தது ஆறு வாரங்கள் ஒரு ஆண் சிங்கத்திற்கு தேவை படும். அதற்கு மேலும் பெண் மறுத்தால், அந்த பெண் சிங்கத்தின் குட்டிகளை புதிய தலைவன் கொன்றுவிடுவான். அப்போதுதான், அந்த பெண் சிங்கம் மீண்டும் தாய்மை அடைய தலைவனிடம் நெருங்கும். (ராஜதந்திரம்!).
சிங்கம் முதல், மற்ற அத்தனை உயர்மட்ட உயிரினங்களுக்கும் தன் மனைவிமார்களை காத்துக்கொள்ளுதல்  என்பது பெரும் சவால் தான்!. அப்படி காப்பாற்றிவிட்டால், மீண்டும் ஒரு புதிய கூட்டம். அதில் அதிக திறமை கொண்டது ‘ஆல்ஃபா‘ – தலைவன். ராஜா!
                                                    ஆல்பா சிங்கம் (படை சூழ) 
சிங்கத்தை பொறுத்தவரை அதன் எதிரிகள், மற்ற சிங்கங்களும் ஆயுதம் தாங்கிய மனிதர்கள் மட்டுமே. (சிங்கம்தான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஊனுண்ணி!)
மனிதர்களை சிங்கங்கள் அதிகம் கொன்றது இல்லை. அப்படியே சில நேரம் தன் வழியில் மனிதன் குறுகிட்டலோ அது மனிதனிடம் கடைபிடிப்பது ஒரு   பிரத்யேகமான அணுகுமுறை.        அதிகம் ஆற்பாட்டம் இல்லாமல் மனிதனுக்கு அதன் ஒற்றைக் காலை பயன்படுத்தி ஒரே ஒரு அறை. அதுதான் மனிதனுக்கு தரப்பட்ட  ‘‘அனஸ்தீசியா’. மயக்கம் உடனே வந்துவிடும்.     பின் சத்தமில்லாமல் எளிமையாக ஒரு ‘ஆப்பரேஸன்’. (‘operation success but patient died’ கதைதான்!).
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மொத்த சிங்கத்தின் எண்ணிக்கை 450,000. இப்போதோ வெறும் 20,000. அதிலும் ஆண் சிங்கத்தின் எண்ணிக்கை 2500 மட்டுமே.
லகில் சிங்கங்கள் வசிப்பது ஆப்பிரிக்கா மட்டும் இந்தியாவில் மட்டுமே!
இப்பொழுதும் நீங்கள் யாராவது உங்கள் வீரத்தை பறைசாற்ற சிங்கத்தை கொல்லும் ஆசை இருந்தால் ‘world conservation union’ பற்றி  தெரிந்து கொண்டு பின் செயல்படவும்.



இறுதியாக – புலித்தந்தைக்கும் சிங்கத்தாய்க்கும் பிறந்த குட்டி – டிக்லான் (TIGLON) 
                                                             TIGLON




தந்தை சிங்கம் + தாய் புலி = ?

                                                          லைகர் (Liger)
 

வாழ விரும்புகிறோம்

விலங்குகளை
இயற்கைக்கு தான் நாங்கள் பயந்தோம் இப்போது இயற்கையுடன் எங்களையும் அழிக்கிறீர்களே …???
எங்களை வாழவிடுங்கள் மனிதர்களே,,,,,

ஓடி ஒளியும் காடுகளையும் அளிக்கிறீர்கள் நான் எங்கு சென்று ஒளிய..? ஒழிந்துவிடுவோமோ நாங்கள்…???
இது எனது குடும்பம் நான் இறந்து விட்டால் என் குடும்பத்திற்கு அரசு நிதி தருவதில்லை எங்களை வாழவிடுங்கள்…………
 
2 Comments

Posted by on March 25, 2011 in Food For Eyes

 

இலக்கணம்

இலக்கணம்

காலை துயில் எழுந்து
கலைந்த கூந்தல்தனை
அள்ளிமுடிந்து
கொள்ளையின்
கேணித் தண்ணீர்
வாசல் தெளித்து

அன்னமாய் அரிசி மாவுதனை
கோலமிட்டு அடுக்களை வேலையினை
அடுக்கடுக்காய் அரங்கேற்றி
அந்தி சாயும் வேளையிலும்;
முந்தி இருப்பாள் வேலையிலும்;
இதுவே பெண் என்றும் ,
அவள் இலக்கணம் என்றும்
எண்ணியிருந்தேன்……………..!

மாற்றம்…….

கைப்பேசி காதல் இசையில்
கண்விழித்து
தட்டி எழுப்பினாள்(ல்)
பயனில்லை…….

அவன் கைப்பேசிக்கு
ஒரு மிஸ்டு கால்
மின்னலாய் எழுந்தான்
மின்சாரக் கணவன்….

அடைமழையாய் அரங்கேறின
அடுக்களை பணிகள்
அரை நாழியில் ;

காலை எட்டு மணி
மின்சார ரயில்ஏறி
சம்சாரம் சென்றுவிட்டாள்…….

மாலை எட்டு மணி
அதே மின்சார ரயில்
சம்சாரக் குயில்…….

இரவு உணவு
இரண்டு பொட்டலம்,
பிரித்து உண்டார்கள்
சிர்த்து கொண்டே
ஒலித்தது கடிகாரம்
இரவு பதினோரு மணி……

சிக்னலாய் சிரிப்பு
சிக்கனமாய் பார்வை..
கண்களில் உறக்கம்
கனவிலே வாழ்க்கை….

என இலக்கணமும்
இல்லாக் கனவானது ……….???????

 
1 Comment

Posted by on March 25, 2011 in Poetry

 

விண்ணைத் தாண்டி வருவாயா…?

விண்ணைத் தாண்டி வருவாயா….?
அது
ஒரு இரவு…..
நான்
அவளை பார்க்கின்றேன்;
அவளும் என்னை பார்க்கின்றாள்;
அவளையே
உற்றுப் பார்க்கிறேன் வெட்கத்தில் வெண்மேகத்தில் முகம் புதைத்தாள் என் உயிர் சிதைத்தாள்……..
அவள் தேகம் எனக்கு புலப்படவில்லை பால் ஓடையாம் பளிங்கு முகம் மட்டுமே பார்வைக்கு அனுமதித்தாள்…..
எங்களுக்குள் மௌனம் மட்டுமே மொழியாய் இருந்த்தது;
பாதைகள் மறக்கும் அடர் காடுகளில் நடந்தாலும் என் பாதச் சுவடில் பின் தொடர்ந்தாள்..
கால்கள் திசை அறியாது நடந்தன,
அவள் பார்வை என்னை விடவில்லை ஓடி ஓடைக் கரையில் ஒளிந்தேன் சல சல என சிதைந்து கொண்டே சிரித்தாள் நீரில் ……….
கண்களை மூடினால் இமைகளில் இருப்பிடம் கொண்டு விழிதனை விட மறுக்கிறாள், கோபத்தில் செல்லமாய் முறைத்தேன் வேகமாய் மூடினாள் முகத்தை மேகத்துணியால்…….
போதும்…. போதும்….
மூச்சுவிடத் துடிக்கிறேன் மூர்ச்சையாகி விடுவேனோ…?
நிறுத்தி விடு உன் விழியின் விளையாட்டுக்களை,
அன்பாய் அழைக்கிறேன் அருகில் வருவாயா..?
இல்லை எனக்கு நிம்மதியே இறங்கி வருவாய் வெண்மதியே….
என்னைத் தூண்டி விட்டாயே..! நிலவே நீ விண்ணை தாண்டி வருவாயே…!
கி. ரஞ்சித் குமார்
 
3 Comments

Posted by on March 22, 2011 in Poetry

 

Avalukkul Eeram…

அவளுக்குள் ஈரம்…….
பசுமைக்கூட்டமாம் என் இளமைத்தோட்டத்தில்
மோகப் புட்களும் முளைக்க,
தாகக் கொடியில்
காதல் மலர்களும் பூக்க:
அவள் கூந்தல்
கொடியில் சூடச்சொன்னேன்
என் காதல்மலரை
பொசுக்கி விட்டுச்சென்றாள்
அக்னிப் பார்வையில்;
பாலையாய் மாறினேன்:
ஏழையாய் ஏங்கினேன்:
அன்பு மழைக்காக
ஆண்டுகள் சில………
பருவநிலை மாற்றம்
அவள் பார்வையில் ஏற்றம்….?
பாறையா..?எனக் கேட்ட
அவள் உள்ளத்தில் சிறை வைத்து;
ஏனோ
காதல் ஊற்றும் கசிந்தது
அவளுக்குள் ஓரமாக……….

கல்லுக்குள் ஈரமாக…..
கி.ரஞ்சித் குமார்
 
1 Comment

Posted by on March 17, 2011 in Poetry

 

Kaettu Chollungal.!!

கேட்டுச் சொல்லுங்கள்.!!
போர் நடக்கவிட்டுவிட்டு
நிவாரணம் தருவதை விட
போரை தடுக்க முடியாதா……….?
“பிளாஸ்டிக் வேண்டாம்” என
பிளாஸ்டிக் பலகையில்
விளம்பரம்……………?
அன்பே கடவுள்..என சொல்லும் எல்லா
மதங்களிலும் அது எங்கே உள்ளது..?
என கேட்டுச்சொல்லுங்கள்…..
குளத்தை மூடி கட்டப்பட்ட
உயர் கட்டிடத்தில்…..
மழைநீர் உயிர்நீர் வாசகப் பலகை…….?
“தமிழ் வாழ்க”
மின்னொளிப் பலகைக்கும்
மின் வெட்டு…..?
பல் விழுந்த்த கிழவி
ஆனாள்……மினுக்கும்
பொன்மேனிக் குமரியாக….
தேர்தல் நேரத்து சாலைகள்……
 
3 Comments

Posted by on March 17, 2011 in Poetry

 

Food for eyes

Love @ 80s

“Western” Indians
 
4 Comments

Posted by on March 15, 2011 in Food For Eyes, Vinod Kumar H

 

Pichchaiyedungal !



பிச்சையெடுங்கள்….


உங்கள் முகம் வேண்டாம் எனக்கு
மனதை பிச்சையிடுங்கள்…..
மண்டியிட்டு கேட்கிறேன்…..
மனதில் பணக்கட்டுகளாய் மகிழ்ச்சி
இல்லாவிட்டாலும் சிரிப்புச்
சில்லரைகளையாவது சிலருக்கு
பிச்சையிடுங்கள்…!
திருவோட்டில் ஒற்றை நாணயம் போல்
இருந்தாலும் சரி உண்மையான ஒரு
உறவையாவது உலகிற்க்கு
பிச்சையிடுங்கள்…….!
உங்கள் மனதைநோக்கி
கேட்கிறேன்;
கன்னியமான அன்பை
பிச்சைதாருங்கள்..
என் கல்லறையில்
பதித்து வைக்க…….!
காலத்தின் ஓட்டத்தில் உங்களுக்கு யாரும்
உறவுப் பிச்சையிடமாட்டார்கள்,
உயிரில்லாமல் வாழ்ந்தாலும்
உறவில்லாமல் வாழமுடியாது……!
ஓடி பிச்சையெடுங்கள்;
ஓயாமல் பிச்சையெடுங்கள்;
உண்மையான உறவுகளைத்
தேடி காலமெல்லாம்
பிச்சைக்காரர்களாய் இருப்போம்…
தவறில்லை…………!
கி ரஞ்சித் குமார்
 
3 Comments

Posted by on March 14, 2011 in Poetry