RSS

Category Archives: DO YOU KNOW (Tamil)

The Name is Bond

சூப்பர் ஸ்டார்!



‘அந்த ஏவுகனை, அதன் இலக்கான தீவிரவாத முகாமை தாக்க இன்னும் இரண்டு நிமிடங்கள் தான் உள்ளது.

அந்த நேரத்தில் தான் அங்கு இருந்த ஒரு அணு ஆயுதத்தை, ஏவுகனையை செலுத்திய இங்கிலாந்தின் ரகசிய உளவுப்படை கவனித்தது.

உடனடியாக ஏவுகனையை செயலிழக்கச்செய்ய உத்தரவிட்டனர். ஆனால், ஏவுகனை கட்டுப்பாட்டு எல்லையை கடந்துவிட்டது. அங்கிருக்கும் அணு ஆயுதம் வெடித்தால் அந்த நாடே சாம்பலாகிவிடும். அதைவிட முக்கியம், அங்கு இங்கிலாந்து ரகசிய உளவுப்படையின் முக்கியமான உளவாளி துப்புதுளக்கச் சென்றுள்ளான்!

ஏவுகனை இலக்கை தாக்க இன்னும் ஒரு நிமிடமே உள்ளது!

ரகசியப்படையின் அதிகாரிகள் எல்லோரும் அந்த உளவாளி இறந்துவிட்டான் என்று நினைக்கும் போது, அந்த உளவாளி, அந்த ஒரு நிமிடத்திற்குள் அந்த மொத்த தீவிரவாத முகாமையும், அங்கு இருக்கும் நூற்றுக்கணக்கான தீவிரவாதிகளையும் அழித்துவிட்டு, அந்த அணு ஆயுதத்துடன் ஒரு விமானத்தில் பறந்து (இறுதி நொடியில்) தப்பித்துவிடுகிறான்.’

இந்த திரைக்கதையை உலக்கத்தில் இரண்டே நபரை வைத்துதான் படமாக்க முடியும்.

ஒருவர் நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

மற்றொருவர் சந்தேகமேயில்லாமல் ‘ஜேம்ஸ் பாண்ட் 007‘ தான்.

ஜேம்ஸ் பாண்ட் என்ற கற்பனை கதாபாத்திரம் 1952ல் ‘இயன் ஃப்ளெம்மிங்‘கால் உருவாக்கப்பட்டது.

Fleming’s James Bond


உலக சினிமாவில் ஒரே கதாபாத்திரத்தை வைத்து அதிக தொடர் திரைப்படங்கள் எடுக்கப்பட்டது ஜேம்ஸ் பாண்ட் தான். மொத்தம் இதுவரை 22. (23வது படப்பிடிப்பில் உள்ளது)

இத்தனைக்கும் இயன் ஃப்ளெம்மிங், இந்த கதாபாத்திரத்தை வைத்து எழுதியது மொத்தம் 12 நாவல்களும், இரண்டு சிறுகதை தொகுப்புகள் மட்டுமே!

பத்திரிக்கையாளராக வேலைபார்த்து வந்த ஃப்ளெம்மிங், இரண்டு மாதம் விடுமுறைக்கு ஜமைக்காவிற்கு சென்றபோது உருவாக்கிய கதாபாத்திரம் தான் இந்த ‘ஜேம்ஸ் பாண்ட்’.

ஃப்ளெம்மிங், “அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு விலங்கியல் ஆராய்ச்சியாளரை மனதில்கொண்டு உருவாக்கிய கதாபாத்திரம் தான் ஜேம்ஸ் பாண்ட்” என்று கூறியுள்ளார். ஆனால், ‘கொஞ்சம் கற்பனை ஊட்டப்பட்ட ஃப்ளெம்மிங் தான் ஜேம்ஸ் பாண்ட்.’ என்பது பல விமர்சகர்களின் கருத்து. காரணம் ஃப்ளெமிங்கின் ஒரு நாள் வாழ்க்கை –

காலை (11 மணிக்கு) எழுந்தவுடன் ஜமைக்கா கடற்கரையில் ஜாக்கிங். அதன் பிறகு இரண்டு மணிநேரம் எழுதுவார். மதிய உணவிற்குப் பிறகு கலவி கலந்த குட்டித்தூக்கம். மாலையில் ‘பார்டி’, உணவு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் மீண்டும் கலவி கலந்த காதல். அதன் பிறகு சுருசுருப்பாக ஒரு மணிநேர எழுத்துடன் அந்த நாளை முடித்துக்கொள்வார். இப்படிப்பட்ட அனுபவத்தின் வெளிப்பாடுதான் நமது ‘ஜேம்ஸ் பாண்ட்’

Ian Fleming

மேலும் ஃப்ளெம்மிங்கிற்கும் ஜேம்ஸ் பாண்டிற்கும் அதிக ஒற்றுமைகளை ஆராய்ச்சியாளர்கள் வரிசைபடுத்துகின்றனர். உதாரணமாக கப்பற்படையில் வேலை பார்த்தது, ஒரே உணவு பழக்கம், ஒரே ரசனை (பெண்கள் மீது!).

எல்லா படத்திலும் ஜேம்ஸ் பாண்ட் சராசரியாக ஒவ்வொரு 23.3 நிமிடத்திற்கு ஒரு முறை மது அருந்துவார் என்று கணக்கு போடும் அளவிற்கு ரசிகர்களும், உலகளவில் வேறு எந்த கதாபாத்திரத்திற்கும் இல்லாத எதிர்பார்ப்புகளும் இவருக்கு உண்டு.

‘ஜேம்ஸ் பாண்’டின் 22 படங்களின் மொத்த வசூல் எத்தனை தெரியுமா?

$11,686,214,000 

லகத்தை காக்கும் ‘ஜேம்ஸ் பாண்’டிற்கு என்றே பிரத்யேகமான பல அம்சங்கள் உண்டு.

Car – Aston Martin

Gun – German-made Walther PPK 

No – 007 ( ’00’ என்பது, இங்கிலாந்து உளவுப்படையான ‘எம்.ஐ.6’ துறையின் உயர் மட்டத்தில் இருக்கும் உளவாளிகளுக்கு கொடுக்கப்படும் அந்தஸ்து!)

Drink – Vodka Martini (Shaken, not Stirred)

Watch – Omega

Theme Music – Composed by Monty Norman

இது அனைத்தையும் விட பிரதானமானது, ஜேம்ஸ் பாண்ட் தன்னை அறிமுகப்படித்துக்கொள்ளும் வசனம் – ‘The name is Bond, James Bond’ 

‘ஜேம்ஸ் பாண்’டின் கடைசி படமான ‘க்வாண்டம் ஆஃப் சொலேஸ்’ அதிகம் வெற்றியடையாததற்கு காரணம் இந்த பிரத்யேகங்கள் இல்லாததால் தான் என்கின்றனர் திரைப்பட விமர்சகர்கள்! அனால் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘Bond 23’ படத்தின் மூலம் விட்ட பணத்தை வட்டியுடன் பெறுவோம் என்கிறார் தயாரிப்பாளர்.

Bond 23

எது எப்படியோ! சுருக்கமாக சொல்லப்போனால் ஜேம்ஸ் பாண்ட், ஹாலிவுட்டின் சூப்பர் ஸ்டார்!

 

Pirates – Deep from the History

கடல் கொள்ளையர்

உலக சரித்திரத்தில் எந்த திசையைப் பார்த்தாலும் ஒரே ஒரு தரப்பினரின் பெயர்மட்டும் நீக்கமற நிரைந்துள்ளனர். அந்த தரப்பினர் – கடல்கொள்ளையர்கள்.

மனிதர்கள் கப்பலை வர்த்தகத்திற்கு பயன்படுத்த தொடங்கியவுடனே கடல்கொள்ளையர்களும் களத்தில் குதித்துவிட்டார்கள். கொள்ளையர்கள்என்பதற்காக இவர்களை கீழ்தரமாக எண்ணிவிடக்கூடாது. இவர்களுக்கென்று தனி கடற்பகுதி, தனிக் கொடி, தனி சட்டதிட்டங்கள் என தனி சாம்ராஜியத்தையே ஒவ்வொரு கொள்ளையர்களும் அமைத்திருந்தனர்.

ஆரம்பத்தில் நீர், உணவு, உடை என அத்தியாவசியங்களை திருடியவர்கள் பின் தங்கம் வைரத்துடன் நிற்காமல் மனிதர்களை கடத்தி பணையத்தொகை வசூலிக்கவும், அடிமையாக விற்கவும் ஆரம்பித்தார்கள்.

இப்படித்தான் கிமு முதலாம் நூற்றாண்டில் சில்சிய கடல்கொள்ளையர்கள் ஜூலியஸ் சீசரையே பணையக் கைதியாக கடத்தினார்கள். ‘என்னதான் தான் கைதியென்றாலும், தனக்கு ராஜமரியாதை அளிக்கப்பட்டதாக’ சீசரே தன் வாழ்கை வரலாற்றில் கூறுகிறார்.
கடற்கொள்ளையர்களுடன் சீசர்

ரோம் அரசாங்கத்திடம், சீசரை விடுவிக்க 20 கோப்பைகளில் தங்கக்காசுகள் கேட்கபட்டபோது, அது தன் தகுதிக்கு குறைவானது என்று கொள்ளையர்களை 50 கோப்பைகள் கேட்கச்சொன்னார் ஜூலியஸ். அப்படியே கேட்டு, அதனை அரசாங்கமும் கொடுத்து, சீசரை மீட்டது. சீசர் நாடுதிரும்பியவுடன் செய்த முதல் காரியம்.. பெரும் படையை அனுப்பி அத்தனை கொள்ளையர்களையும் பிடித்து கடற்கரையிலேயே சிலுவையில் அறைந்தார்.

க.கொள்ளையர்கள் ஒவ்வொருவரும் தமக்கென்று ஒரு கொடி வைத்திருந்தாலும் ‘ஜாலி ரோகர்’ (Jolly Roger) என்ற மண்டைவோடும் இரண்டு எலும்புகளும் பொருத்தப்பட்ட கொடியே பிரதானமாக கடல்கொள்ளையர்களுக்கு அமைந்துவிட்டது. (இந்த கொடியை பின் காமிக்ஸும் சினிமாவும்தான் அதிக பிரபலப்படுத்தியது.)
Jolly – Roger

மேலும் கடல்கொள்ளையர்கள் பெரும்பாலும் ஒற்றை கண்ணை கருப்பு துணி ஒன்றால் மறைத்துகட்டப்பட்டவர்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள். இதற்கு உண்மையான காரணம் – க.கொள்ளையர்களின் உணவில் விட்டமின் ‘C’ குறைவாக இருந்ததனால் ‘கிரிக்கட்’ என்னும் நோய் ஏற்பட்டு தங்கள் ஒற்றை கண்ணை இழந்ததே!

மக்கள் ஹீரோவாக ஏற்றுக்கொண்ட பல க.கொள்ளையர்கள் சரித்திரத்தில் உண்டு. குறிப்பாக ‘பிளாக்பியர்டு’ (Blackbeard). நீண்டு தொங்கும் சுருள் தாடி, புகை வரும் குல்லாய் என ஒரு ‘ஸ்டைல் ஐகா’னாக இருந்தவன் இந்த ‘பிளாக்பியர்டு’ (நிஜப்பெயர் – எட்வர்ட் டீச்). சக்கரை நோயால் தன் ஒற்றைகாலை இழந்து, இவன் கட்டைகால் பொருத்திக்கொள்ள, பின் வந்த பல கொள்ளையர் இந்த ‘கட்டைகால் ஃபேஷனி’ல் மயங்கி தாங்களும் அதை பொருத்திக்கொண்டனர்.
Blackbeard

தொழில் ரீதியிலும் தனக்கென்று தனி வழியை கடைபிடித்தான் பிளாக். முதலில், அருகில் வரும் கப்பல் எந்த நாட்டுடையதென்று கண்டுபிடித்து அந்த நாட்டின் கொடியை தன் கப்பலில் பறக்கவிடுவான். அந்த கப்பல் நட்புறவாடி அருகில் வந்ததும் தன்னுடை நிஜக் கொடியை பறக்கச்செய்து அவர்களை பீதியடையச் செய்வான். அதன்பின் பெரும்பாலும் அனைத்து கப்பல்களும் இவனிடம் சரணடைந்துவிடும்.

பெண் க.கொள்ளையர்களும் சரித்திரத்தில் தங்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டனர். சைனாவைச் சேர்ந்த ஷிங் ஷூ என்பவளிடம் மட்டும் 1800 கப்பல்கள் இருந்தது.

 ஏறத்தாழ அத்தனை க.கொள்ளை கூட்டமும் மறைமுகமாக ஏதோவொரு அரசாங்கத்தின் துணையுடன்தான் செயல்பட்டது என்பதை சரித்திரம் சுட்டிக்காட்டுகிறது. பிரான்ஸிஸ் டிரேக் என்னும் கடல் கொள்ளையன் முதலாம் எலிசபெத் ராணிக்கு இரண்டு கோடி மதிப்புள்ள தங்க நாணயங்களை (16ஆம் நூற்றாண்டு) மாமூலாக தந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைக்கும் கம்போடியாவிலும் சொமாலியாவிலும் கடல் கொள்ளையர், நம் இந்திய கப்பல்கள் உட்பட பன்னாட்டு கப்பல்களை களவாடுவது வருத்தமான ஒரு நிகழும் சரித்திரம்.
 

The Kiss

னிதனின் சாதனைகள் எல்லாத் துறைகளிலும் கடலென விரிந்துகொண்டிருக்கும் வேளையில்  சமீபத்தில் நான் கேள்விப்பட்ட ஒரு (உலக) சாதனை, என்னை வெகுவாக கவர்ந்தது.
அமெரிக்காவில் டேலி-கான்சியலோ ஜோடியின் 33 மணி நேர இடைவிடாத முத்தம் தான் அந்த மகத்தான சாதனை. ‘எவ்வளவு மூச்சுப்பயிற்சி? எத்தனை கவனம்? எத்தனை சத்திழப்பு? எத்தனை உழைப்பு? அடேங்கப்பா!’
                               முத்தத் திருவிழா 
‘அப்படி முத்தத்தில் என்னதான் இருக்கிறது’ என்று கேட்டால், ‘முத்தத்தில் என்ன இல்லை’ என்று ஒட்டுமொத்த மனித கலாச்சாரங்களும் ஒன்று சேர்ந்து குரல் எழுப்புகிறது.மனித இனம் மட்டும்மல்ல, சிம்பன்ஸிகள் கூட தங்கள் கைகளை உயர்த்தி இதை ஆமோதிக்கிறது.
மனிதர்களைப் போலவே துணையின் முகம் பார்த்துப் புணரும் சிம்பன்ஸிகளில் கூட, ஆண் சிம்பன்ஸி வெளியே சென்று வீடு திரும்பும் போது, பெண் சிம்பன்ஸியை இறுக அனைத்து சிறிது நேரம் முத்தமிட்டுக் கழிக்கின்றன.

‘முத்தமிடுவது உப்புத்தண்ணியை பருகுவது போல. பருக பருக தாகம் அதிகரிக்கும்’ என்று ஒரு சீன பழமொழி உண்டு
னால், காதல் கலவியைத்தாண்டி ஆப்பிரிக்க பழங்குடியினர், தங்கள் கூட்டத்தின் தலைவன் நடந்து சென்ற இடத்தை முத்தமிட்டு, முத்தத்தை மரியாதை நிமித்தமாகவும் கடைபிடித்தனர்.
பண்டைய ரோமிலும், பேகன் கலாச்சாரத்திலும் கடவுளுக்கு ‘ஃப்ளையிங் கிஸ்’ கொடுத்து வழிபட்டார்கள்.
இனுயித்’களும் (எஸ்கிமோ) மலேசியர்களும்,  பாலினேசிய குடிமக்களும் (பசிபிக்தீவுகளில் ஒரு பகுதி- பாலினேசியா) அன்புடையவர்களின் மூக்கோடு மூக்கை உரசுவதை, முத்தமாக கருதுகிறார்கள்.
ப்லார்னி’ என்னும் கல்லை முத்தமிட்டால் செய்யுங்காரியம் வெற்றியடையும் என்று அயர்லாந்தில் இன்றும் நம்பிக்கை உண்டு.

இப்படி உலகம் முழுவதும் ஒன்றாக முத்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வேளையிலும், அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் மீசைவைத்தவர்கள் (எந்தவொரு சகமனிதருக்கும்) முத்தமிடுவது சட்டப்படிக்குற்றம்!
மேலும் கணக்டிகட் மாநிலத்தின் தலைநகரமான ஹார்ட்ஃபோர்டில், கணவன், மனைவிக்கு ஞாயிற்றுக்கிழமைகளில்    முத்தமிடக்கூடாது . இதுவும் அந்த மாநிலத்தின் சட்டம் !!
முத்தத்தை முதலில் எழுத்துக்களில் கொண்டுவந்த பெருமை இந்தியர்களையே சேரும்நான்கு வேதங்களிலும் முத்தத்தை பற்றிய குறிப்புகள் உண்டு. வாத்சாயனர் முத்தத்துக்கென்றே தனி அதிகாரம் படைத்து முத்தத்தை முப்பது வகையாக பிரித்திருக்கிறார்

னால் உலக புகழ்பெற்ற முத்தத்தை வழங்கிய நாடு ஃபிரான்ஸ் தான். ‘ஃபிரென்ச் கிஸ்’ – இதழோடு இதழ் இணையும் இந்த முத்தத்தைதான்  ‘‘ன்மாக்களின் பரிமாற்றம்’ என்று உலக மக்கள் கருதுகின்றார்கள்.
சில அறிவியல் ஆய்வுகள்:
ஒரு நிமிட முத்தத்தில் 26 கலோரிகள் கரைகிறது. (இது ஐந்து நிமிட நடை பயிற்சிக்கு சமம்)
பிரென்ச் முத்தத்தில் நம் முகத்தில் உள்ள 34 சதைகள் பங்குகொள்கின்றனஇதனால் முகச்சுருக்கங்கள் வருவது குறையும் என்கிறது விஞ்ஞானம்.
நகக்கண்களை விட 100 மடங்கிற்கும் மேல் மனித உதடுகள் உணர்ச்சியுடையது. (இது நம் பால் உறுப்புகளின் உணர்ச்சிகளை விட அதிகம்!)
இருவர், இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடம் போது, அவர்களின் கொளுப்புச்சத்துபுரோடின் போன்றவற்றில் பரிமாற்றம் ஏற்பட்டு, அது அவர்களின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது! இது தெரியாமலா வள்ளுவர் “பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்” என்று பாடியிருப்பார்.
மேலும் ஒரு முக்கியமான தகவல் : 
முத்தமிடுபவர்கள் இருவருக்கும் வாயில் ரத்தகாயம் இல்லாதவரை முத்தமிடுவதால் உறுதியாக ‘எயிட்ஸ்‘ பரவாது.
இந்த மொத்த தகவலையும்  எழுதுவதற்குள் மேலே சொல்லப்பட்ட உலக சாதனை, ஒரு தாய்லாந்து ஜோடியால் முறியடிக்கப்பட்டுவிட்டது.  

தற்போதைய சாதனை நேரம் – 46:24:09நீங்களும் முயற்சி செய்யலாம்!

 

LionKing

னிதன் மற்றவர்களுக்கு பட்டம் கொடுப்பதற்காக அதிகம் சிந்திப்பதோ, மெனக்கெடுவதோ இல்லை. பட்டத்திற்கும் சம்மந்தப்பட்டவருக்கும் பொருத்தம் கூட பார்காமல், கொஞ்சம் எதுகை மோனையுடனோ அல்லது எதாவது ஒரு பெரிய பொருளுடன் ஒப்பிட்டோ, காரியத்தை எளிமையாக முடித்துவிடுவார்கள். ஆனால் மனிதன் தெரிந்தோ தெரியாமலோ அளித்த பட்டங்களில் மிகமிக பொருத்தம், சிங்கத்திற்கு மட்டுமே!. ‘காட்டு ராஜா !’
மனிதனைப் பொறுத்தவரை மிருகங்களின் அடிப்படைத் தேவை உணவு, புணர்ச்சி மற்றும் தற்காப்புக்காக தாக்குவது. னால் இந்த மூன்று காரணங்களையும் தாண்டிய அவற்றின் சிந்தனையும் செயல்பாடும் நம்மை கொஞ்சம் வியப்படையத்தான் வைக்கிறது.
சிங்கத்தை பொறுத்தவரை ‘ஆதிக்கம்‘ மிக முக்கியமாக கருதப்படும். சராசரியாக ஒரு சிங்க கூட்டத்தில் (Pride!) 1 முதல் 4 வரை பெரிய ஆண் சிங்கங்களும் (ஆண் சிங்கத்திற்கு ஆங்கிலத்தில் ‘TOM’ என்றும் ஒரு பெயர் உண்டு), 6 முதல்10 வரை பெரிய பெண்சிங்ககளுடன் இருக்கும். இதில், ஆண் சிங்கங்களில் ஆல்ஃபா  (Alpha) , பீட்டா(Beta)  என்றுதரவரிசையும் உண்டு. பெரும்பாலும் ஒரே ஒரு ஆல்ஃபா  சிங்கம் தான் ஒரு கூட்டத்தில் வசிக்கும் (சர்வாதிகாரம்!).ல்ஃபா  சிங்கத்திற்கான தகுதி – பலம், எடை, வேகம், துணிவு, பயமுறுத்தும் அணுகுமுறை மற்றும் எதிர்பவர்களை ஆரம்பத்திலேயே அடக்கிவைப்பது. மேலும் பிடறியின் அளவும், கருமையும் கூட கூட்டத்தின் தலைவனை முடிவு செய்யும். பூனை குடும்பத்தில் (cat family) கூட்டமாக வாழ்வது சிங்கம் மட்டுமே!]
னால்!  ஒரு கூட்டத்தின் தலைவனாக இருப்பது  அவ்வளவு சுலபம் அல்ல. என்னதான் ஒரு நாளுக்கு 20 மணி நேர ஓய்வு என்றாலும், தன்னுடைய எல்லையை பாதுகாப்பதில் ஆண்தான் முழு பொறுப்பு வகிக்கிறது. ஆண் சிங்கம் தன் எல்லையை குறிக்க மரங்களிலும், செடிப்புதர்களிலும் சிறுநீர் கழிக்கும். இந்த வாசனை மற்ற சிங்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாக விளங்குகிறது. மேலும் ஒரு சிங்கத்தின் கர்ஜனை சுமார் 8கி.மி வரை ஒலிக்கும்இதுவும் கூட வேற்று கூட்டத்தை சேர்ந்த சிங்கங்கள் தன் எல்லைக்குள் வராமல் தடுக்கவே! சராசரியாக ஒரு கூட்டத்தின் தலைவன் தன் நாளின் தொடக்கத்திலும் முடிவிலும் கர்ஜிப்பது வழக்கம்.


வேட்டை!.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மைஇது சிங்கத்தின் உண்மையான வாழ்கை நெறி.  ஒரு இரையை குறிவைத்து, அதனை ஒட்டுமொத்த கூட்டமும் சுற்றி  வலைத்துஇரையின் தப்பிக்கும் வழிகளை மறைத்து, அதன்பின்னரே  தாக்கும். 

சாதாரனமாக, இரவில் மிகவும் குளிர்ந்த பொழுதுகளில்தான் சிங்கங்கள் வேட்டைக்குச் செல்லும்இரையின் அளவு ஒட்டுமொத்த கூட்டத்திற்கும் போதுமானதாக இருந்தால், எல்லோருக்கும் ஒரே பந்திதான்! ஆனால், அளவு குறைவான நேரத்தில் தலைவனுக்கே முன்னுரிமை. காரணம் – கூட்டத்தை காக்கும் தலைவன் பலத்துடன் இருப்பது அவசியம் என்று மொத்த கூட்டமும் உணரும்(ஒரு ஆண் சிங்கம் சராசரியாக ஒரு வேளைக்கு 34கி இறைச்சி உண்ணும்)
ல்லோரும் நம்புவது  போல் பெண் சிங்கம்தான் வேட்டைக்கு செல்லும். குட்டிகளுக்கும் பரிமாறும். னால் சமீபத்திய ஆராய்ச்சிகளின் படி 50% முதல் 60% வரை, வேட்டையில் ஆண்களும் பங்குகொள்கிறது. குறிப்பாக இரையின் அளவு மிக அதிகமாக இருக்கும் பட்சத்தில் ஆண் சிங்கமே  வேட்டையை முன் நின்று நடத்தும். (சிங்கங்கள் ன்று கூடி பெரும் ஆப்பிரிக்க யானையையும் கொன்றுவிடும்)
புணர்ச்சியிலும் சிங்கம் சிங்கம்தான்!. ஒரு பெண் சிங்கம் புணர்ச்சி காலத்தில், ஒரே நாளில் ஐம்பதுமுறைக்கும் மேல்ஆண் சிங்கங்களுடன் புணரும். இந்த காலம் மூன்று அல்லது நான்கு நாள் நீடிக்கும்.  பின்பு    மூன்றரை மாதத்தில்குட்டிகள்.
குட்டிகள்  இரண்டு  ஆண்டு வரை பெற்றோரின்   பராமரிப்பிலேயே   வளரும் ஆண் சிங்கங்கக் குட்டிகள்,  மூன்று வயதை நெருங்கும் போது, பிடறிகள் வளர்ந்து கொஞ்சம் இளமை தென்பட்டால், அது கூட்டத்தின் தலைவனால் கூட்டத்தைவிட்டு விரட்டப்படும்! (ஆதிக்கப் பிரச்சனை தான் காரணம். மேலும் தன் மனைவிமார்களை பாதுகாத்துக்கொள்வதற்காக).  இப்போது அந்த குட்டிகள் –  நாடோடிகள்!
நாட்கள் கழியக் கழிய இவை தன் திறமைகளை வளர்த்துக்கொண்டு (Survival of the Fittest!)மற்ற நாடோடிச் சிங்கங்களை கூட்டு சேர்த்துக்கொண்டு வேறு ஒரு கூட்டத்தை தாக்கி, அதன் தலைவனை விரட்டிவிட்டு, அந்த கூட்டத்தின் பெண்களை தன் வசம் க்கிக்கொள்ளும். இப்போது இது மீண்டும் ராஜா!.
அந்த புதிய கூட்டத்தின் பெண் சிங்கங்கள் உடனடியாக சேர்க்கைக்கு சம்மதிக்காது. இந்த புதிய தலைவன் தன் திறமைகளையும், த்னனால் இந்த கூட்டத்தை கட்டிகாப்பாத்த முடியம் என்றும் நிருபித்தாக வேண்டும். பின்புதான் பெண் சிங்கம் ப்ச்சை கொடி காட்டும்!. இதற்கு குறைந்தது ஆறு வாரங்கள் ஒரு ஆண் சிங்கத்திற்கு தேவை படும். அதற்கு மேலும் பெண் மறுத்தால், அந்த பெண் சிங்கத்தின் குட்டிகளை புதிய தலைவன் கொன்றுவிடுவான். அப்போதுதான், அந்த பெண் சிங்கம் மீண்டும் தாய்மை அடைய தலைவனிடம் நெருங்கும். (ராஜதந்திரம்!).
சிங்கம் முதல், மற்ற அத்தனை உயர்மட்ட உயிரினங்களுக்கும் தன் மனைவிமார்களை காத்துக்கொள்ளுதல்  என்பது பெரும் சவால் தான்!. அப்படி காப்பாற்றிவிட்டால், மீண்டும் ஒரு புதிய கூட்டம். அதில் அதிக திறமை கொண்டது ‘ஆல்ஃபா‘ – தலைவன். ராஜா!
                                                    ஆல்பா சிங்கம் (படை சூழ) 
சிங்கத்தை பொறுத்தவரை அதன் எதிரிகள், மற்ற சிங்கங்களும் ஆயுதம் தாங்கிய மனிதர்கள் மட்டுமே. (சிங்கம்தான் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஊனுண்ணி!)
மனிதர்களை சிங்கங்கள் அதிகம் கொன்றது இல்லை. அப்படியே சில நேரம் தன் வழியில் மனிதன் குறுகிட்டலோ அது மனிதனிடம் கடைபிடிப்பது ஒரு   பிரத்யேகமான அணுகுமுறை.        அதிகம் ஆற்பாட்டம் இல்லாமல் மனிதனுக்கு அதன் ஒற்றைக் காலை பயன்படுத்தி ஒரே ஒரு அறை. அதுதான் மனிதனுக்கு தரப்பட்ட  ‘‘அனஸ்தீசியா’. மயக்கம் உடனே வந்துவிடும்.     பின் சத்தமில்லாமல் எளிமையாக ஒரு ‘ஆப்பரேஸன்’. (‘operation success but patient died’ கதைதான்!).
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மொத்த சிங்கத்தின் எண்ணிக்கை 450,000. இப்போதோ வெறும் 20,000. அதிலும் ஆண் சிங்கத்தின் எண்ணிக்கை 2500 மட்டுமே.
லகில் சிங்கங்கள் வசிப்பது ஆப்பிரிக்கா மட்டும் இந்தியாவில் மட்டுமே!
இப்பொழுதும் நீங்கள் யாராவது உங்கள் வீரத்தை பறைசாற்ற சிங்கத்தை கொல்லும் ஆசை இருந்தால் ‘world conservation union’ பற்றி  தெரிந்து கொண்டு பின் செயல்படவும்.



இறுதியாக – புலித்தந்தைக்கும் சிங்கத்தாய்க்கும் பிறந்த குட்டி – டிக்லான் (TIGLON) 
                                                             TIGLON




தந்தை சிங்கம் + தாய் புலி = ?

                                                          லைகர் (Liger)