RSS

Category Archives: தினமொரு திருக்குறள்

004. தினமொரு திருக்குறள் !!

குறள் 631:

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு.

கலைஞர் உரை:

உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன்.


English:


The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself).

 

003. தினமொரு திருக்குறள் !!

குறள் 661:

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.

கலைஞர் உரை:

மற்றவை எல்லாம் இருந்தும் ஒருவரது மனத்தில் உறுதி மட்டும் இல்லாவிட்டால் அவரது செயலிலும் உறுதி இருக்காது.

English Meaning:

Firmness in action is (simply) one’s firmness of mind; all other (abilities) are not of this nature.

 

002. தினமொரு திருக்குறள் !!

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்.
– 639



கலைஞர் உரை:

தவறான வழிமுறைகளையே சிந்தித்துச் செயல்படுகிற அமைச்சர் ஒருவர் அருகிலிருப்பதை விட எழுபது கோடி எதிரிகள் பக்கத்தில் இருப்பது எவ்வளவோ மேலாகும்.

English Meaning:


Far better are seventy crores of enemies (for a king) than a minister at his side who intends (his) ruin.

 

தினமொரு திருக்குறள் !!


அழுக்காறு அவாவெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் – 35

Tamil Meaning:
பொறாமை, பேராசை , பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

English meaning :

Four ills eschew and virus reach,
Lust, anger, envy, evil-speech.