RSS

Category Archives: Haikoo

கோடை சாரல்கள்
ருவக்
காதலுக்கு
ஒய்வு

கோடை விடுமுறை.

வாடிப் போய்விட்டன
சத்துணவின்றி.

அரசுப் பள்ளியின்
அண்டங் காக்கைகள்.

மாணவர்களின்
சப்தமின்றி
வேதனையில்
உதிர்ந்துவிட்டன

மைதானத்து மரங்கள்.

ம்மா செய்து தந்த
தேங்காய் மிட்டாய்,

ஆலமரத்து
கிழவியின்
சுவைக்கு ஈடில்லை.

ரிமம் இல்லா
ஓட்டுனர் ஆனேன்

நுங்கு வண்டிக்கு.

ழலைகள் விளையாடும்
பள்ளியில் மன்னர்களும்,
அரசிகளும்,
மந்திரிகளும்,
விளையாடுகின்றனர் .

சீட்டுக்கட்டில்.

நானும்
முதலாளி

வேப்பங்கொட்டை
வியாபாரம்.


ருடத்தில் ஒருமுறை
மட்டுமே புத்தகப்
பூவின் மனம்.

புதிய காதலி
கிடைத்தால்
பழையவள்
வேறு பிரிவு
போய்விட்டாள்.

ஜூன் மாதம்

சுவற்றில் எதிரொலித்து,

காதில் இனிக்கும்

ழலைகளின் ரீங்காரம்.

காகங்களின் மதிய நேரத்து கீதம்,

மாணவர்களின் தோழனான

தெரு நாயின் ஏக்கம்

கிழவியின் அதட்டல் வியாபாரம்,

டற்கல்வி ஆசிரியரின்

விசில் சப்தம் என ஏதுமின்றி
நிசப்தமான சுடுகாடு தான்

கோடையின் சாரலில்

பள்ளிக்கூடங்கள்……

ரஞ்சித் குமார்.கி

 
2 Comments

Posted by on May 4, 2011 in Haikoo

 

Puthiya Seithi !

புதிய செய்தி !!
45  நாள்  மீன்பிடிக்க
தமிழக மீனவர்களுக்கு,   
இந்திய எல்லையில் தடை.

சிங்கள கடற்படை துக்கம்!   


 
1 Comment

Posted by on April 21, 2011 in Haikoo, Prasanna Subramanian

 

Uyirillaa Varigal !!


உயிரில்லா வரிகள்….!!!!!!!

மயங்க வைப்பதனால்
தான்

பெண்(கள்) என

பெயரோ???

குழந்தை இல்லை,
கை விட்டான்
கணவன்;

கைபிடித்தன
தினம் நூறு குழந்தைகள்
பள்ளியில் ஆயா வேலை………!

மதுவிலக்கு கேட்கிறாள்
என்
இந்தியத் தமிழச்சி !
மாதத்திற்கே
விலக்கு கேட்கிறாள்
என்
ஈழத்து தமிழச்சி…………!

தமிழன் என்று
தலை நிமிர்ந்தான்
ஓங்கி
இடித்தது
முள்வேலி கூடாரம் ??????

உயிரையும்
விலையாய்

கொடுக்கிறேன்

நான் பெற்ற தாயின்

கருவறையில்

ஒரு கணம் தூங்க…….!

உப்பில்லாத உணவும்
அமிர்தமானது

அம்மாவின் அன்பில்……!

காதல்….
காதல்….
காதல்….
சொல்லும்போதே

போதை தலை சுற்றுகிறது…….!

சமூகத்தில்
பெண் மதிக்கப்பட

வேண்டுமா?
காதலை

கட்டாய

சட்டமாக்குங்கள் ……!

ரஞ்சித்……..!

 
2 Comments

Posted by on March 10, 2011 in Haikoo

 

பூட்டு !

பூட்டு !
பூசாரி மகளுக்கு 
வளைகாப்பாம்!
எங்கள் ஊர் கோவில் 
இன்று 
பூட்டப்பட்டது !!

விபூதி 
கோவிலுக்குச் சென்றேன்.
முழுமனதாய் வழிபட்டேன்.
விபூதி பொட்டலங்கள் வாங்கிக்கொண்டேன்.
விடுதியல் இருக்கும் என் அம்மாவிற்கு 
அஞ்சலில் அனுப்புவதற்காக !!
 
1 Comment

Posted by on March 1, 2011 in Haikoo, Prasanna Subramanian