RSS

Category Archives: Sudden Fiction

270

270 

பூங்கா முழுவதும் சேரும் சகதியுமாக இருந்தது.

“என் அறுபது வருசத்துல நேத்து நைட் கொட்டின மழைமாதிரி பார்த்ததே இல்லை. அப்பப்பா! எப்படி ஒரு மின்னல்! எத்தனை பெரிய இடி!”

“ஆனால் உலகமே அழிந்தாழும், எனக்கு காலையில 5 மணிக்கெல்லாம் இங்க வாக்கிங் வரலைனா எனக்கு பொழுது விடியாது. யாருமே இல்லாத வேளையில், இந்த பூங்காவே எனக்கு சொந்தம் போல இருக்கும்.”

அந்த பூங்காவின் மத்தியில் புதிதாக பெரிய குழி ஒன்று புகை மூட்டமாக இருந்தது.

“நேத்து நைட்டே நினைத்தேன். அத்தனை பெரிய இடி சத்தம்! அருகில் எங்கோ தான் இடி விழுந்திருக்க வேண்டும் என்று.”

குழி அருகில் பல செடிகள் கருகிக்கிடந்தது. அதனருகே முதியவர் ஒருவர் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர் பின்னால் சென்று, “இங்க இடி விழுந்ததை பாத்தீங்களா ஐயா?” என்று வினவினேன்.

அவர் தன்  தலையை மட்டும், சரியாக 270 டிகிரி திருப்பி, “ஆம்!” என்றார் என்றது.

—-x—-
 
1 Comment

Posted by on February 27, 2012 in Prasanna Subramanian, Sudden Fiction

 

பயணம்

பயணம்

‘உலகின் நிம்மதியான மனிதன் எங்கே?’

பிறப்பிலேயே கோடீஸ்வரனான நான், இந்த உலகின் நிம்மதியான மனிதனைத் கண்டுபிடுக்க ஏறத்தால என் பாதி சொத்தை ஆரூடம், டெல்ஃபை போன்ற பல சமாச்சாரங்களில் இழந்துவிட்டேன்.

வறுத்தமில்லை!

அந்த மனிதன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்ததே மகிழ்ச்சி! அவரைக் கண்டு, அவர் நிம்மதியின் இரகசியத்தை தெரிந்துகொண்டால் போதும்.

அவர் பெயர் நிவேரோ மிகோசி.

பல தேசங்கள் தாண்டி, பல கண்டங்கள் தாண்டி, இந்த உலகின் மறுமூலையிலுள்ள அவர் ஊரையும் நெருங்கிவிட்டேன்.

எத்தனை அழகான தீவு. மனிதனின் இயந்திர மூளை தீண்டாத பூமியின் ஒரே பாகம் இதுதானோ!

அந்த ஊர்வாசிகளிடம் நிவேரோவின் இருப்பிடம் பற்றி விசாரித்தேன். அந்த மக்களுக்கு அவர் இரகசியம் தெரிந்ததாக தெரியவில்லை. எனக்கு வழி மட்டும் சொன்னார்கள்.

அந்த இடம் மேலும் அழகாக இருந்தது. இரண்டு மலைகளுக்கு நடுவில் ஒரு பெரிய ஏரி. எங்கு பார்த்தாலும் பச்சை. நிம்மதியான மனிதன் மட்டும் அல்ல, கடவுளே இங்கு வாழலாம். அத்தனை அமைதி. அழகான அமைதி

அந்த ஏரியின் மத்தியில் ஒரு வயதான மனிதர், தனியாக ஒரு சிறு படகிலிருந்து மீன்பிடித்துக்கொண்டிருந்தார். அந்த ரம்மியமான காட்சியில் மூழ்கிய வேளையில் அவர் என்னை நெருங்கிவருவதை மறந்துவிட்டேன்.

அவர் அருகில் வந்ததும், அவர் நறுமணம் என்னை நினைவுக்கு இழுத்தது.

அவரிடம், “”நீங்கள் தான் நிவேரோ மிகோசியா?””

கையில் சில மீன் வைத்து இருந்தவர், புன்னகையை மட்டும் பதிலாக தந்தார்.

அவர் முகத்தில் அத்தனை அமைதி! ‘அந்த புன்னகைக்கு எத்தனை வயது’ என்று சரியாக கூறமுடியவில்லை. “

“ஐயா, நான் உங்களைப் பார்க்க வெகுதொலைவிலிருந்து வருகிறேன். நீங்கள் தான் இந்த உலகின் நிம்மதியான மனிதர் என்பதை நான் அறிவேன். அதன் இரகசியத்தை தயவுசெய்து எனக்கு கூறுமாறு வேண்டிக்கொள்கிறேன்”.”

நிவேரோ, “”மன்னிக்கவும்! இன்னும் ஐந்து நிமிடத்திற்குள் இந்த மீன்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லவில்லையென்றால் என் மனைவி திட்டுவாள். நான் வருகிறேன்””

—-x—-
 
 

Sorry?!?

ஸாரி?!?

வாரத்தின் இறுதி நாள். மிஸ்டர் மேத்தா அன்றும், ஃபோனும் கையுமாக பிசியாக இருந்தாலும் உள்ளத்தின் பூரிப்பு முகமெங்கும் சிரிப்பாக வெளிப்பட்டது. “கண்டிப்பாக வந்துடனும். யெஸ், யெஸ். நாளைக்கு ஈவினிங்க் தான்” தன் நட்பு வட்டாரங்களுக்கும், தொழில் ரீதியான முகவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் பர்சனலாக அழைப்பு விடுத்தார்.

சனிக்கிழமை மாலை 6 மணி – ஹோட்டல் ‘ஸ்பெண்ட் பார்சியூன்.’

அனைவரையும் முன்னின்று இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார். இதனைப்போல பார்ட்டிகளெல்லாம் புதிதல்ல என்றாலும், என்றுமில்லாத மிதமிஞ்சிய மகிழ்சியுடன் மேத்தா காணப்பட்டதற்கு காரணம் தன் குடும்பத்துடன் நெடு நாட்களுக்குப்பிறகு நேரம் செலவிடமுடிந்ததும், அதற்கு வழிவகுத்த லாபகரமான தொழில்யுக்தியும் (‘ மேக்ஸிமம் பிராபிட் ஆப் தி குவார்டர்’ ).

அனைவரின் பாராட்டுகளும், வாழ்த்துகளும் நிறைவை தந்த பொழுதும் கையில் வைத்திருந்த குவலையிலிருந்த அருமருந்தே மேலும் மனநிறைவை தருவதைப்போல் உணர்ந்தவர் விடாது தொடர்ந்தார் இரவு வரை.

மறுநாள். முன்தினம் வந்திருந்த அனைவரும், அதில் விட்டுப்போனவர்களும் கூட வந்திருந்தனர். சற்று மாறி இருந்தது இடமும் அவர்களின் உணர்ச்சியும் மட்டுமே.

ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி – ஹாஸ்பிட்டல் ‘ரீகெயின் ஹெல்த்’.

ஒருவரது வரவுக்காக காத்திருந்த அனைவரும் தொலைவில் மற்றொருவரது முகம் பார்த்ததும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். ஆனால் முகம் வாடிய நிலையில் வெள்ளை ஆடை அணிந்திருந்த அவர் சொன்னார் “லிவர் பெயிலியர். ஸாரி!”

யார் செய்ததற்கு யார் சொல்வது – “ஸாரி?!?”

!!!—!!!
 
2 Comments

Posted by on February 17, 2012 in Karthika Rajendran, Sudden Fiction

 

தாய்-அம்மா

தாய்அம்மா

சுபமங்கள மஹாலில் நாளைய முகூர்த்தத்திற்கான வேலைகளை ஒருபுறம் மும்முரமாக கவனித்துக் கொண்டிருந்தார் நவநீதன். அன்றைய தினம் மாலை நிகழவிருக்கும் நிச்சயத்திற்கான ஏற்பாடுகள் ஏறக்குறைய முடிந்துவிடும் தருவாயில் இருந்தது.

வரவேற்பு பந்தலில் சந்தனம் குழைத்து, இனிப்புகள் நிரப்பி, ரோஜா மலர்களை பரப்பி,பன்னீரை குவளையில் நிரப்பி இவற்றை முறையாக எடுத்துவைப்பது முதல்அடுப்பங்கரையில் கேசரியின் இனிப்பும், இட்லி சாம்பாரின் காரமும், ஐஸ்கிரிமின் ஜில்லென்ற தன்மையும் பதமாக உள்ளதா என பார்ப்பது வரை எல்லா காரியங்களையும் சுழன்று சுழன்று கவனித்தாள் தாய்யம்மா.

இடையிடையே மணமகள் அறையினுள் கவனத்தை செலுத்தி ஏதேனும் அழுகுரல் கேட்கிறதா என்பதை கண்டறிந்து, எந்த தொந்தரவும் இல்லாமல் குழந்தையின் சிரிப்பு சப்தம் கேட்டால் நிம்மதி பெருமூச்சுடன் தனக்கென உள்ள ஆயிரத்தி எட்டு வேலைகளில் முழ்கிடுவாள்.

திருமணம் நிகழவிருப்பது ரிடயர்டு தாசில்தார் நவநீதனின் மகள் கயல்விழிக்கு. அவளிடம் முழுஉரிமை தந்தையைவிட, தாயயம்மாவுக்கே அதிகம். தான் பெறவில்லை எனினும் இருபத்திமுன்று வருடம் வளர்த்தவள் ஆயிற்றே . அந்த வீட்டில் தாயம்மாள் வேலை செய்தால் என்றாலும் நவநீதானிடம் மிகுந்த மரியாதையும் கயலிடம் அளவற்ற பாசமும் கொண்டிருந்தாள். கயலும் தாயம்மாளை அம்மா என்றே அழைத்தாள்.

நல்ல நேரம் நெருங்கிக் கொண்டிருக்கையில் நவநீதன் கயல்விழியை அழைத்து வருமாறு கூற தாயம்மாள் அறையினுள் சென்று மணமகள் அலங்காரத்திலிருந்த கயல் தன் குழந்தை ஆனந்தியோடு விளையாடுவதை நோக்கினாள். தாயம்மாள், கயல் தன்னிடம் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டவுடன் அவளை உச்சி முகர்ந்து முத்தமிட்டாள். கை பிடித்து மேடைக்கு அழைத்து வந்து நிச்சய தாம்பூலம் மாற்றுவதை கண்டு மனதார வாழ்த்தி மகிழ்ச்சியுற்றாள்.

இனி மற்றவைகளை நவநீதனிடம் விடுத்து அறைக்கு திரும்பி தன் குழந்தை உறங்குவதை உறுதி செய்தவள், களைப்பு மிகுதியால் தானும் ஒரு மூலையில் படுத்து கண் அயர்ந்தாள்.மண்டபத்தில் அரங்கேறிக்கொண்டிருந்த வாத்தியங்களின் இசையோ, திரளாக வாழ்த்த வந்திருந்த மக்களின் ஆரவாரமோ அவளது ஆழ்ந்த தூக்கத்தை கலைக்கவில்லை.

ஆனால் திடீரென்று அழத்தொடங்கிய தன் குழந்தையின் குரல், வெளியே நிலவிய களேபரத்துடன் ஒப்பிடும் போது மெல்லியது தான். அப்படியிருக்க அந்த சினுங்கல் எவ்வளவு விரைவாக உடுருவிச்சென்று அவளது தூங்கிக்கொண்டிருந்த மூளையை தட்டி எழுப்பியதோ தெரியவில்லை, நொடிப்பொழுதில் கண்விழித்து குழந்தையை வாரி அணைத்து சமாதானப்படுத்தினாள், என்னம்மா, என்ன ஆச்சு என் அம்மாவுக்கு! என் ஆனந்தக் கண்ணம்மா!! என் தாயம்மா!!!” என்று.

!!!—!!!
 
 

பணக்காரன்!

பணக்காரன்!

ரெடாரென்டினுள் நுழைந்தான் தர்மா. மணி இரவு 8:30 என்று காட்டியபடி சுழன்றது கடிகாரமுள். “வெயிட்டர்என்றழைத்து தனது டின்னருக்கான மெனுவை “ஒன் பர்கர் அண்ட் ஒன் மினி கோக்என கூலாக ஆர்டர் செய்தான். எனினும் ஒருவித சலனத்துடன் அடிக்கடி பர்ஸை எடுப்பதும் பணத்தை எண்ணுவதுமாக இருந்தான்.


மெனு வந்தது. சற்று நேரத்திற்கெல்லாம் வெயிட்டரும் வந்தான் ’48 ரூபாய்பில்லுடன். எண்ணி சரியாக ரூபாய் எடுத்து வைத்துவிட்டு தன்னுடைய பைக்கில் விரைந்தான்.
புத்தகம்படிப்பதை பொழுதுபோக்காக கொண்டிருந்தவன்பக்கங்களின் இடையே சில்லறை காசை புக்மார்க்காக வைக்கும் பழக்கமிருந்ததை நினைத்து பெருமிதம் கொண்டான். அப்படி அனைத்து புத்தகங்களிலிருந்தும் சிரமப்பட்டு தேடி எடுத்து வநதது தான் தற்போது கையிலிருந்த 49 ரூபாய்.
தெருக்கோடியை அடைந்தவுடன் செல்போன் சிணுங்கியது . மறுமுனையில் இன்னைக்கு கோடி ரூபாய் மதிப்புள்ள அசெயின்மன்ட் ஒண்ணுல கையெழுத்து போட்டிருக்கேன். நீ சீக்கிரமா ஊருக்கு வந்திரு . நீதான் அதை பார்த்துக்கனும். அப்புறம் நீ கேட்ட பணத்தை இன்னைக்கு போட முடியல. நாளைக்கு காலைல பணம் உன் கையிலிருக்கும்“. பதிலாக “சரிப்பாஎன்ற ஒற்றை சொல்லுடன் தொடர்பை துண்டித்தவன்அய்யா! தர்மம் பண்ணுங்கஎன்னும் குரல் கேட்டு திரும்பினான்.
மீதமிருந்த ஒற்றை ரூபாய் நினைவுக்குவந்ததும் அதை எடுக்க பர்ஸை திறந்தவனை பார்த்து சிரித்தன உள்ளிருந்த நான்கைந்து .டி.எம் கார்டுகள். அதனை பொருட்படுத்தாது ஒற்றை ரூபாயை முதியவருக்கு கொடுத்துவிட்டு சிறு புன்னகையுடன் தெருக்கோடியை கடந்து இருப்பிடம் நோக்கி புறப்பட்டான்.

!!!—!!!

 
 

வெற்றி ?

வெற்றி ? 

தாஜ் ஹொட்டலின் ஒரு சிறிய அறையில் இந்தியாவில் உள்ள அத்தனை வர்த்தக ஜாம்பவான்களும் கூடியிருந்தனர். மதிப்பிற்குறிய அத்த்னை நிருபர்களுக்கு முன் ஜெய்ராமிற்கு பாராட்டு விழா நடந்து கொண்டிருந்தது. 
ஆசியகண்டத்தின் பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்த சந்தோஷத்தில் மலர்ந்த முகத்துடன் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தான் ஜெயராம். 
“நான் என் வாழ்கையை பூஜியத்தில் தொடங்கினேன். என் தந்தை எனக்காக விட்டுப்போனது இறுபது கோடி ருபாய் கடன் மட்டும் தான். பணம் என்பது எல்லோர்க்கும் அத்தியாவசியம். எனக்கு உயிர்மூச்சு. இன்று நான் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரன். இது வெறும் ஷேர் மார்க்கட்டில் ஏற்பட்ட சுழற்ச்சியால் கிடைத்த வெற்றியல்ல. இதற்காக நான் பல விஷயங்களை இழந்ததிருக்கிறேன். பல நாள் தூக்கம், பல வேளை சாப்பாடு, என் குடும்பத்துடன் நான் செலவு செய்திருக்க வேண்டிய பொன்னான நேரங்கள். ஆனால் இன்று நான் அடந்த வெற்றி, என்னுடை அத்தனை இழப்புகளையும் ஈடுசெய்துவிட்டது.”
நிருபர், “ உங்களுடைய அடுத்த இலக்கு?” 
“உலகத்தின் நம்பர் 1 பணக்காரன்!” என்று ஜெயராம் பதிலளித்த வேளையில் ஜெயராமின் மனைவி லதா, அந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்து ரமணிச்சந்திரன் நாவல் படித்துக்கொண்டிருந்தாள்.
 
 

நம்ம குடும்பம்

நம்ம குடும்பம் 

நான் சொன்னால் புரிஞ்சுக்கோ ருண். நான் ஒன்னும் காதலுக்கு எதிரியில்லை. ஆனால் அந்த மகாவும் அள் குடும்பமும் நம்ம குடும்பத்துக்கு ஒத்துவராதுடா!” 

தன் மகனின் அருகில் அமர்ந்து எடுத்துக்கூறினார் சிவசங்கரன்.

“அவள் வசதியெல்லாம் நம்மளவுக்கு இல்லைங்கிறது கூட எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் அந்த பொண்ணோட குடும்பம்தான் அவ்வளவு சரியில்லை அருண். அவளோட அம்மாவுக்கு மாசம் பொறந்தா ஒரு புது படத்துக்குப் போகனும். அவள் அப்பனுக்கு ஊருபூறாம் கடன். அவள் அக்கா, ஏதோ கால்செண்டர்ல வேலைன்னு ராத்திரியெல்லாம் வீடு தங்க மாட்டேங்கிறாள். அவள் அண்ணன் ஒரு கீழ்சாதிப் பொண்ண கல்யாணம் பண்ணியிருக்கான். இந்த குடும்பம் நம்மளுக்கு ஒத்துவராது அருண். நம்ம குடும்பத்துக்குன்னு ஊருக்குள்ள ஒரு பேர் இருக்குடா!” 

சிவசங்கரன் தன் மகனிடம் பேசிக்கொண்டிருக்கையில் அவர் அருகில் வந்து நின்ற வெய்டரிடம்,

“எனக்கு ஒரு சுமால் ரம்மும், மகனுக்கு ஒர் லார்ஜ் வோட்காவும் தாங்க. மிக்ஸிங்க்கு சோடா கொண்டுவாங்க” என்று ஆர்டர் செய்துவிட்டு,

 “ஏன் அருண், உனக்கு மிக்ஸிங்க்கு சோடா ஓ.கே தான?”

—-x—-
 

மம்பி

மம்பி

மேற்கு வங்கம், நாடியா மாவட்ட அரசு மருத்துவமனை. அவசர சிகிச்சை பிரிவு என பெங்காலியில் எழுதப்பட்ட அறை முன் ஏழ்மை படிந்த ஒரு குடும்பம் தன் மகள் மம்பி-யை எண்ணி கண்ணீருடன் காத்திருந்தது.

12 வயது சிறுமி மம்பி பூச்சிகொல்லி குடித்து தற்கொலைக்கு முயன்றதாக அங்கு அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

கண்ணில் ஒன்றை இழந்த தந்தை மிர்துள் சர்க்காரும், சிறுநீரக குறைபாடு உள்ள சகோதரன் மனோஜித்திற்கும் மேலும் ஒரு இடியை தந்தது மம்பியின் தற்கொலை முயற்சி!

நொடிகள் கரைய… கரைய… செவிலிகளின் வாட்டமும்… டாக்டரின் அமைதியும் அக்குடும்பத்திற்கு மம்பியின் சாவை அப்பட்டமாக தெரிவித்தது. இயலாமையில் மிர்துள் தரையில் புரண்டு அழ ஆரம்பித்தான். மம்பி இழப்பை ஏற்க நேரம் தேவைப்பட்டது அவனுக்கு.

உடலை அங்கிருந்து கிடத்தி அவளது கிராமத்திலேயே புதைக்கப்பட்டாள் மம்பி!

இரண்டு நாள் கழித்து மிர்துள் மம்பி-யின் கையெழுத்தில் ஒரு சீட்டை கண்டான். அதில் அவள்,

நான் இறந்துவிட்டால், என் உறுப்புகளை தந்தைக்கும் சகோதரனுக்கும் கொடுங்கள்! ” என்று பிழையுடன் எழுதியிருந்தாள் மம்பி.

—-XXXX—-


 
 

தோழர்கள்

நேரம் வந்துவிட்டது!
இரவு மணி 9.30. துள்ளி எழுந்து என் கடை கதவுகளை மூட ஆரம்பித்தேன். இனி கடைசி பேருந்தை பிடித்து 30 கி.மீ தொலைவில் உள்ள என் கிராமத்து வீட்டிற்கு செல்ல வேண்டும். நான்கு திங்களாக இதுவே வழக்கம் என்பதால் வாழ்க்கை சற்று வெறுப்பாக இருக்கிறது.
நேரம் நெருங்குவதால் குடி மக்களின் தாகம் தீர்க்க பச்சை கடையில் அலையடித்தது. அந்த வேடிக்கை எனக்கும் தாகத்தை உண்டாக்க , கூட்டத்தில் ஒருவனாய் … தீர்த்தம் பெற்றேன் ( வென்றேன் ) . 


தீர்த்தத்தின் தாக்கத்தால் பேருந்தில் தள்ளி அமர்ந்தனர் எல்லோரும். என் நிறுத்தம்! பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்டேன்.

என் தடத்தில் என்னை கண்ட நாய் ஒன்று தன் காதை விடைத்து எனக்கு எச்சரிக்கை செய்தது. ஏனோ அருகில் என்னை கண்ட அது இயல்பாக தன் குட்டிகளுடன் விளையாடத்துவங்கியது. துணை இன்றி நடக்கும் எனக்கு ஒரு வழி தோழன்.

என் பாதையில் ஒர் நூறு அடியில் மீண்டும் ஒரு எச்சரிக்கை!!

வெள்ளையாய் இரு பெண் பிம்பங்கள். நான் வெடவெடத்து அங்கேயே நின்றேன். எங்களுக்குள் இடைவேளை குறைய… அங்கே! மல்லிகை பூ… கால் கொழுசு… பெரிய பொட்டு… என்ற இலக்கணமில்லா ஒரு சுடிதார் பேயும் அதன் தோழி ஜீன்ஸ் பேயும்!

அவைகள் (அவர்கள்) தங்களுக்குள்,


“இவண்டி! இன்னிக்கும் லேட்டா வராண்டீ! “.

 
 

Arrear

அரியர்

அது என் அறை தானா?  எனக்கே குழப்பம் காரணம் அவள் அழகுப் பதுமையாக என் அருகே,அவளிடம் இருந்து அவளுக்கு தெரியாமல் நான் சேகரித்த காதல் சின்னங்களை காண்பித்தேன்.. 
  எதோ ஒரு இனம் புரியாத இன்பம் எங்களுக்குள்ளே,வீட்டில் யாருமில்லை அதனால் என் உள்ளத்தில் பயம் (சலனம் சிறிதுமில்லை காரணம் அனுபவித்தவர்களுக்கே புரியும்) 
  இதயம் புல்லட் ரயிலை மிஞ்சி ஓடிக்கொண்டிருந்தது அனால் அவளுக்குள் காதல் வெள்ளம் கண்களையும், இதழையும் மதகுகளாக கொண்டு வெளியேறின. எப்படியோ அவள் மடியில் தலை வைக்க அனுமதி கிடைத்தது,இதயத்தின் புலம்பலை முகத்தில் காட்டாமல் தலை சாய்த்தேன்..
  டிக். டிக், 
  ஐயோ… யாரோ வந்து விட்டார்கள், முடிந்தது என் காதல் கதை, மானம் போகப் போகிறது ஒரு பைசா தரமாட்டார்கள் இனி, நம்பமாட்டார்கள்….(நினைத்துக் கொண்டிருக்கும்போதே..) 
  மீண்டும்… டிக், டிக், கண் விழித்தேன் கதவைத்திறக்க… “எல்லாரும் போயாச்சு ,அடுத்த தடவையாவது அரியர் கிளியர் பண்ணுவியா??..” காதில் மட்டுமே கேட்டன வரிகள், அனால் உள்ளுக்குள் என் காதல் யாருக்கும் தெரியவில்லை,நிம்மதியாய் தேடினேன் கல்லூரி வளாகத்தில் அவளை………